திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2023 (13:53 IST)

மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ, மாணவிகள் மயக்கம்

valparai
கோவை மாவட்டம் வால்பாறையில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் பெரரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த னிலையில், நேற்று முன்தினம் இப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே ஆசிரியர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்குச் சிகிச்சை முடிந்து  16  மாணவர்கள் வீடு திரும்பினர். 8 மாணவ, மாணவிகள் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, பொள்ளாச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா, கோவை மாவட்டம் கலெக்டரில் நேர்முக உதவியாளர் உமாமகேஷ்வரி ஆகியோர் பள்ளிக்குச் சென்று சத்துணவு மையம், குடி தண்ணீர் தொட்டி பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தனர்.

மேலும், உணவுப் பொருட்களை பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சப் கலெக்டர் பிரியங்கா கூறினார்.