1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By J.Durai
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (13:46 IST)

22-வது தேசிய அளவிலான கராத்தே போட்டி!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 22-வது தேசிய அளவிலான கராத்தே போட்டி  நடைபெற்றது. இப் போட்டியில் இந்தியாவில் உள்ள 17 மாநிலங்களில் இருந்து பலர் கலந்து  கொண்டனர்
 
இதில் தமிழகத்தைச் சேர்ந்த  சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்து  சீகான், கண்ணன்,ராஜா, திருப்பதி ஆகியோரது தலைமையில் 25 வீரர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர்.
 
சென்னை மாணவர்கள்
சண்டை பிரிவில் 
3 தங்கப்பதக்கம்
1 வெள்ளி பதக்கம் வென்றனர்
 
கட்டா பிரிவில் 
 
2 வெள்ளி பதக்கம்
4 வெண்கல பதக்கம் வென்றனர்
 
மதுரை மாணவர்கள்
சண்டை பிரிவில்
 
1 தங்கப்பதக்கம் 
3 வெள்ளி பதக்கம் 
2 வெண்கல பதக்கம்
 
கட்டா பிரிவில்
 
2  வெள்ளிப் பதக்கம்
4 வெண்கல பதக்க களை 
பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் தமிழக வீரர்கள்