செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (11:26 IST)

சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை: தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்..!

home damage
சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கோடை காலத்தில் அவ்வப்போது ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது என்பதையும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த ஆலங்கட்டி மழையில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் குறிப்பாக சூறைக்காற்று காரணமாக வீடுகளின் கூரைகள் பிய்த்துக் கொண்டு சென்ததாகவும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்திலும் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தென்னை மரங்கள் மீது இடி விழுந்ததால் மரத்தில் இருந்த குரங்குகள் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran