திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (22:11 IST)

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தரமற்ற உணவு தயாரித்த 2 பேர் கைது !

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்துக் கொடுத்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் அருகே ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும்2 பணியாளர்கள்  தரமற்ற உணவை சாப்பிட்டு இறந்ததாகக் கூறி சக  பெண் தொழிலாளர்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரமற்ற உணவை சாப்பிட்டு இறந்ததாகக் கூறப்பட 2  பெண் ஊழியர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாக வீடியோ கால் மூலமாக விளக்கம் அளித்தனர்.

மேலும், அமைச்சர் கணேசன் பெண் தொழிலாளார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, 16 மணி நேரமாக நடந்த போராட்ட முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், ஃபாகஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்துக் கொடுத்த சக்தி கிச்சன் கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்த பிபின்(34) மற்றும் கவியரசன் (32) ஆகிய  2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்நிறுவனத்தின் உயரதிகாரிகையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.