வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (07:31 IST)

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: தீர்ப்பு தேதி குறித்த தகவல்

தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுக அரசுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கருதப்படும் 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இந்த வழக்கின்  தீர்ப்பு வரும் 22ஆம் தேதிக்கு பின்னர் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

18 பேர் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நீதிபதியான நீதிபதி சத்தியநாராயணன் அவர்கள் இந்த வழக்கின் விசாரணையை முடித்துவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல் நீதிபதி சத்தியநாராயணன் விடுமுறையில் செல்வதாலும், 13ம் தேதி முதல் 21-ம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதாலும் வரும் 22ஆம் தேதிக்கு பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன