1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (19:59 IST)

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! இதோ பட்டியல்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பின் தாக்கத்துக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை இன்று புதிதாக அறிவிக்கப்பட்ட 58 பேரையும் சேர்த்து மொத்தம் 969 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மொத்த எண்ணிக்கை 7000 ஐ தாண்டியுள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கையும் 240 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களை தனிமைப்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் விதமாக ரெட் அலர்ட் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி , சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.