செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூன் 2020 (09:31 IST)

காலை 10 மணிக்குள் சென்னைக்கு வரவேண்டும் – மருத்துவர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

கோப்புப் படம்

சென்னையில் புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ள 1550 பட்ட மேற்படிப்பு மருத்துவர்களும் இன்று காலைக்குள் சென்னைக்கு வரவேண்டும் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அங்கு இதுவரை 23,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில்70 சதவீதம் ஆகும். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இதனால் நோயாளிகளை கவனிக்க மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதை சமாளிக்க தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து புதிதாக 1550 பட்ட மேற்படிப்பு மருத்துவர்களை சென்னையில் பணியமர்த்தப் போவதாக ஜூன் 5 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று காலை 10 மணிக்குள் சென்னை வர வேண்டுமென அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 2மாதங்களுக்கு சென்னையில் தங்கி சிகிச்சையளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.