1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (07:29 IST)

கொரோனாவுக்கு பலியான 15 வயது சென்னை சிறுவன்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்த வயது உடையவர்களும் கொரோனாவுக்கு பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அந்த வகையில் தற்போது 15 வயது சிறுவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையில் கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுவன் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த சிறுவனின் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் மூச்சுத்திணறல் அதிகம் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது 
 
இதனையடுத்து அந்த சிறுவன் தனியார் மருத்துவமனையில் இருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கீழ்பாக்கம் மருத்துவமனையில் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குளுக்கோஸ் மூலமாக உடலுக்கு தேவையான சத்துக்கள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது இருப்பினும் அந்த சிறுவன் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது 
 
மேலும் அந்த 15 வயது சிறுவன் அரியவகை தசை சிதைவு நோயால் ஒரு சில ஆண்டுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அதுமட்டுமின்றி நிமோனியா காய்ச்சல் நுரையீரல் பாதிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவை இருந்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த இளம்வயது இறப்பு இதுதான் என்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது