திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (19:19 IST)

கொரோனாவால் தி.நகரில் மட்டும் எத்தனை கோடி பாதிப்பு தெரியுமா? அதிர்ச்சித் தகவல்

கொரோனாவால் தி.நகரில் மட்டும் எத்தனை கோடி பாதிப்பு தெரியுமா?
ஊரடங்கு உத்தரவு காரணமாக எந்நேரமும் பிஸியாக இருக்கும் தி.நகர் பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தி.நகரில் மட்டும் சராசரியாக தினமும் 135 கோடி ரூபாய் வியாபாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
சென்னையின் முக்கிய இடமாக இருக்கும் தி.நகரில் நகை கடை மற்றும் ஜவுளி கடைகள் அதிகம் உள்ளது. இங்கு பொது மக்கள் கூட்டத்தால் எப்போதும் நிரம்பி வழியும் என்பதும் ஒவ்வொரு கடையிலும் இலட்சக்கணக்கில் வியாபாரம் ஆகும் என்பதும் தெரிந்ததே
 
இதனால் தி. நகரில் மட்டும் வருடத்திற்கு 50,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தினமும் 135 கோடி ரூபாய் வரை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
 
ஊரடங்கு உத்தரவு விரைவில் தளர்த்தப்பட வேண்டும் என்று தி.நகரில் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது