திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 13 ஜூன் 2020 (08:05 IST)

ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேர்களுக்கு கொரோனா ! தி நகரில் பீதி!

கொரோனாவால் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தி நகரில் சீட்டு விளையாடிய 13 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 35,000 ஐ நெருங்குகிறது. தினமும் 1500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தலைநகர் சென்னையில் தினசரி 1000 பேருக்கு பேர் மேல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தி நகர் தர்மபுரம் பகுதியில் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.