திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (09:17 IST)

அனுமதிக்கப்பட்டதோ 30,000 முன்பதிவோ 13 லட்சம் - சபரிமலை அப்டேட்!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஸ்வாமி தரிசனத்திற்கு 13 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என தகவல். 

 
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் நடை திறக்கப்பட்டது. மேலும் 16 ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும் நிலையில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
 
அதன்படி நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஸ்வாமி தரிசனத்திற்கு 13 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என தேவசம் போர்டு தகவல் தெரிவித்துள்ளது. 
 
மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் பெற்ற கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.