திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (11:51 IST)

திமுகவில் மேலும் 13 விக்கெட்டுகள் விழப்போகின்றன: பாஜக பிரபலம் பேட்டி..!

திமுகவில் மேலும் 13 விக்கெடுகள் விழப்போகின்றன என பாஜக பிரபலம் கேபி ராமலிங்கம் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த கேபி ராமலிங்கம்  கர்நாடகா அரசு மேகதாது கோவில் அணை கட்ட 3 குழுக்களை அமைத்துள்ளது. ஆனால் அது பற்றி  கவலை கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று உள்ளார். தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்பவர்கள் கொடுத்த வரவேற்பை அவர் ஏற்று உள்ளார்.  மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து விடுமோ என்ற சந்தேகமும் இதனால் ஏற்படுகிறது.
 
 அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் எங்கே சென்றார்? எதை கொண்டு சென்றார்? அவருடன் யார் யார் சென்றனர் என்ற விவரம் ஜூலை 28ஆம் தேதிக்கு பிறகு தெரியவரும். 
 
அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் சென்ற 9 பேர்கள் மற்றும் நான்கு பேர்கள் என திமுகவில் மொத்தம் 13 விக்கெட்டுகள் விரைவில் விழும் என்று அவர் கூறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran