1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (14:56 IST)

120 மாடுகளை கைது செய்த ஊராட்சி நிர்வாகம்: திருவாரூரில் பரபரப்பு!

120 மாடுகளை கைது செய்த ஊராட்சி நிர்வாகம்: திருவாரூரில் பரபரப்பு!
பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 120 மாடுகளை திருவாரூர் ஊராட்சி நிர்வாகம் கைது செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருவாரூர் மாவட்டத்திலுள்ள தண்டலை என்ற ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகள் சுற்றித் திரிவதாகவும் அந்த மாடுகள் காரணமாக அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருவதாக புகார்கள் அளிக்கப்பட்டன. ஒரு சிலர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது
 
குறிப்பாக மாலை நேரங்களில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் பெரும் இடைஞ்சலாக இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்ப பட்டது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி தண்டலை ஊராட்சி நிர்வாகத்தினர் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை உடனே மாட்டுக்கு சொந்தக்காரர்கள் ஓட்டிச் செல்ல வேண்டும் என்று அறிவித்தார்கள் 
 
இந்த அறிவிப்பை அடுத்தும் மாடுகள் சுற்றித்திரிந்த காரணத்தினால் அதிரடியாக 120 மாடுகள் கைது செய்யப்பட்டது. இதனை அடுத்து மாடுகளின் உரிமையாளர்கள் வந்து கேட்டபோது ஒவ்வொரு மாட்டுக்கும் ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் ஒப்படைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது