மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்!
கடந்த சில நாட்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து கைது செய்து வருகின்றனர் என்பதையும் அவர்களிடம் இருந்து படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.
குறிப்பாக தமிழர் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு ஏலம் விட கொடுமையான நிகழ்ச்சியும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் 12 பேர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு தலைமன்னார் கடற்படை முகாம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது
மேலும் அவர்களுடைய இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது