வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2015 (20:48 IST)

கனமழையால் தென் தமிழகத்திற்கு செல்லும் 12 விரைவு ரயில்கள் ரத்து

கனமழையால் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை உள்ள ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் 12 விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


 
 
சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் எழும்பூரிலிருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி பியர்ல் சிட்டி உள்ளிட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், செங்கோட்டை செல்லக்கூடிய பொதிகை எக்ஸ்பிரஸ், மன்னார்குடி செல்லக்கூடிய மன்னை எக்ஸ்பிரஸ், திருச்சி செல்லக்கூடிய ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் செல்லக்கூடிய உழவன் எக்ஸ்பிரஸ் சேலம் எக்ஸ்பிரஸ், காரைக்குடி எக்ஸ்பிரஸ், ஆகிய 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் சென்னை புறநகர் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குரோம்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வரை உள்ள ரயில் தண்டவாளம் தெரியாத அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் பல்லாவரம் வரை மட்டும் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

The following  12 trains leaving Chennai Egmore are cancelled today (01.12.2015) due to water overflowing on Railway Tracks between Villupuram – Tambaram Section.

Train no: 12605
 
Name of the Train: Chennai Egmore-Karaikkudi Pallavan Express
 
Scheduled to Departure @ MS: 15.45
 
Train no:16105
 
Chennai Egmore-Tiruchendur Chendur Exp
 
16.05
 
Train no:16713
 
Chennai Egmore -Rameswaram Express
 
17.00
 
Train no: 16115
 
Chennai Egmore-Puducherry Express
 
18.10
 
Train no: 12693
 
Chennai Egmore-Tuticorin Pearl City Express
 
19.15
                                                                                                           மேலும் படிக்க அடுத்தப் பக்கம் பார்க்க

Train no: 12661
 
Chennai Egmore-Sengottai Pothigai Express
 
20.55
 
Train no: 16101
 
Chennai Egmore-Rameswaram Express
 
21.40
 
16179
 
Chennai Egmore-Mannargudi Mannai Express
 
22.00
 
Train no:16177
 
Chennai Egmore-Tiruchchirappalli Rockfort Exp
 
22.30
 
Train no:11063
 
Chennai Egmore-Salem  Express
 
23.00
 
Train no:16175
 
Chennai Egmore-Karaikal Express
 
23.15
 
Train no:16183
 
Chennai Egmore- Thanjavur Uzhavan Exp
 
23.30

மேலே குறிப்பிட்டுள்ள 12விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளது.