1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (14:50 IST)

11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

suicide
சென்னையில் 11ம் வகுப்பு மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு வரும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இதனை அடுத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது என்பதும் இதனை அடுத்து மனநல மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் 11ம் வகுப்பு மாணவர் அந்தோணி தினேஷ் என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்