வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (19:47 IST)

பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

11th std
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10ஆம் தேதி நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் ஜூன் 27ஆம் தேதி காலை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியாகும் என்றும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது
 
பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண உதவும் ஆன்லைன் முகவரி இதோ
 
இணையதள முகவரி : www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in