வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 13 நவம்பர் 2022 (13:33 IST)

எல்லை தாண்டி மீன்பிடித்த 11 இலங்கை மீனவர்கள் கைது: இந்திய ராணுவம் அதிரடி

fishermen
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவ்வப்போது சிங்கள ராணுவ படை கைது செய்து வரும் நிலையில் தற்போது இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 இலங்கையைச் சேர்ந்த 11 பேர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக கடலோர காவல் படையினர் கைதுசெய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த 16 மீனவர்களையும் காக்கிநாடாவில் சேர்ந்த கடலோர படையினர் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலோர காவல்படையினர் எச்சரிக்கை செய்ததாகவும் எச்சரிக்கையும் மீறி தொடர்ந்து அவர்கள் மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva