10 ஆம் வகுப்பு மாணவன் தந்தையான சம்பவம்: மயிலாடுதுறையில் பரபரப்பு

Caston| Last Modified வெள்ளி, 1 ஜனவரி 2016 (15:57 IST)
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை 21 வயது பெண் ஒருவார் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டதில் அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.
10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தந்தையான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் தனது தாத்தா வீட்டில் தங்கி படிக்கும் அந்த மாணவனை அப்பகுதியில் உள்ள 21 வயதான மாணவனின் உறவுக்கார பெண் ஒருவர் அடிக்கடி சந்தித்துள்ளார்.

அடிக்கடி சந்தித்து பேசிய அந்த பெண் மாணவனிடம் பாலியல் ஆசைகாட்டி நெருங்கி பழகியுள்ளார். மாணவனை வலுக்கட்டாயமாக ஆசை வார்த்தைகளை கூறி உடலுறவு கொண்டுள்ளார் அந்த 21 வயது பெண்.
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி அந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மாணவனை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி மாணவனின் தாத்தாவிடம் நடந்ததை கூறி அந்த பெண் வற்புறுத்தியுள்ளார்.

இதனையடுத்து மாணவன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவனின் புகாரில் இரவில் வீட்டில் தனியாக இருந்த தன்னிடம் ஆசை வார்த்தைகளை கூறி வலுக்கட்டாயமாக அந்த பெண் உடலுறவு கொண்டதாகவும், அதனால் தற்போது குழந்தை பிறந்துள்ளதாகவும், இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் வற்புறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
ஆய்வாளர் சுகுணா, குழந்தை ஒன்றின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பாலியல் தாக்குதல், கடும் பாலியல் தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் குழந்தை, தாய் மற்றும் மாணவனுக்கு மருத்துவபரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :