வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (10:01 IST)

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு

மாணவர்களுக்கு ஏதுவாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பரில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதனிடையே மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 50 சதவீதமும், 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள பாடத்திட்டத்தில் 35 சதவீத பாடப்பகுதிகளும் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.