Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

’உண்மையாக உழைத்தவர் பன்னீர்செல்வம்’: ஆதரவு தெரிவிக்கும் சரத்குமார்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 11 பிப்ரவரி 2017 (23:55 IST)
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் உண்மையாக உழைத்த ஒ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதை அறிந்து வேதனையடைந்ததாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சரத்குமார், “ஓ.பன்னீர்செல்வத்தின் உழைப்பை நேரில் பார்த்திருப்பதாலும், அவரது திறமையிலுள்ள நம்பிக்கையாலும், சமத்துவ மக்கள் கட்சி சகோதரர்களின் வேண்டுகோளின்படி முதல்வர் ஒ. பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேல்ய்ம், எம்.ஜி.ஆரில் தொடங்கி, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் அதிமுக, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்திருந்தாலும், தற்போது அசாதாரணமான சூழ்நிலையில் சிக்கி இருப்பதை நினைத்து முன்னர் வருத்தம் வெளியிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் உண்மையாக உழைத்த ஒ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதை அறிந்து வேதனையடைந்ததாக ஏற்கனவே குறிப்பிட்டதையும் சரத்குமார் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :