செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (16:52 IST)

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி காவல்துறையில் அளித்த புகார்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி என்பவர் ராமநாதபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் என்பவரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் 
 
நடிகை சாந்தினி தனது கணவர் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கூறியுள்ளதாகவும் தனக்கு இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சாந்தினியின் பொய்யாக புகார் காரணமாக தனக்கும் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் எனவே சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
வசந்தியின் இந்த மனுவை சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அனுப்ப ராமநாதபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது