1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : ஞாயிறு, 21 மே 2023 (02:07 IST)

பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது? முக்கிய அறிவிப்பு..!

polytechnic
10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யும் தேதி குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 
 
பாலிடெக்னிக் படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. http://tnpoly.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மாணவர் மாணவியர் விண்ணப்பிக்கலாம் என்றும் மேற்கண்ட இணையதளத்தில் மாணவர்களின் சந்தேகங்கள் அனைத்தும் தீர்க்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விரும்பினால் உடனடியாக இன்று முதல் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran