புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (20:03 IST)

அமராவதி தடுப்பணையில் அதிகரிக்கும் மழை நீர் வரத்து; பார்வையிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர்

கரூர் அருகே கட்டப்பட்ட அமராவதி தடுப்பணைக்கு முதன் முறையாக 2 ஆயிரம் கன அடி மழை நீர் வந்ததை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தடுப்பணையை பார்வையிட்டார்.


 


கரூரை அடுத்த பெரிய ஆண்டான்கோவில் பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கடந்த 2011 – 2016ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 15 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான நங்காஞ்சி மற்றும் குடகனாறுகளில் மழை நீர் வரத்து அதிகரித்தது.

இந்த மழை நீரானது தற்போது ஆண்டான் கோவிலில் கட்டப்பட்ட தடுப்பணையை தாண்டி தண்ணீர் கரூர் நகரை தாண்டி சென்று கொண்டுள்ளது. முதன் முறையாக நிரம்பிய இந்த தடுப்பணையை போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்வையிட்டார்.