1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (18:04 IST)

ஒரே தொகுதியில் போட்டியிடும் 3 ஓபிஎஸ்கள்

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,   பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணியில் அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில்,   வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரளிப்பதாக முன்னாள்  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்த நிலையில், தே.ஜ.கூட்டணியில் அங்கம் வசிக்கும் அவருக்கு ராம நாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் களமிறங்கும்  நிலையில், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
 
இந்த நிலையில், அவருக்குப் போட்டியாக தெற்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார். ஏற்கனவே இதே பெயர் கொண்ட மற்றொருவர் நேற்று மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது ஒரே தொகுதியில் 3 பன்னீர்செல்வம் போட்டியிடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.