திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (19:43 IST)

ஏ.கே. ராஜன் குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!

ஏ.கே. ராஜன் குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் ஏ.கே. ராஜன் குழுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்டது ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு என்பது தெரிந்ததே. இந்த குழு நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில் இந்த குழு அமைத்தது மாநில அரசின் அதிகார வரம்பு மீறிய செயல் என மத்திய அரசு காட்டமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மாநில அரசு குழு அமைத்து இருப்பதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்து உள்ளது. இந்த வாதம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது