ஆட்டோவில் கடத்தி கழுத்து அறுக்கப்பட்டு உயிர் பிழைத்த பெண்ணின் கண்ணீர் கதை

Ilavarasan| Last Updated: திங்கள், 21 ஏப்ரல் 2014 (10:00 IST)
சென்னையை சேர்ந்த பெண்ணை ஆட்டோவில் கடத்தி கொலை செய்ய முயன்ற கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை கண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மீஞ்சூர் அருகே உள்ள எண்ணூர் துறைமுகம் அருகே முட்புதர்கள் நிறைந்த பகுதியில் ஒரு பெண்ணை 4 பேர் கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை கண்டதும் அந்த பெண்ணை விட்டு விட்டு 4 பேரும் ஆட்டோவில் ஏறிச்சென்று விட்டனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணை மீட்டு மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.
எனது பெயர் விஜயகுமாரி (வயது 40). சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறேன். அதே பகுதி ஒட்ரைவாடை தெருவில் வசிக்கும் அல்லா நபியின் மனைவி சரோஜா என்ற பாத்திமா(40) என்பவரிடம் நான் உள்பட பலர் சீட்டு கட்டி வந்தோம். ஆனால் எங்கள் சீட்டு பணம் ரூ.7½ லட்சத்தை தராமல் அவர் மோசடி செய்து விட்டார்.

இதுபற்றி பாதிக்கப்பட்ட நான் உள்பட 300 பேர், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் செய்தோம். அதன்பேரில் காவல்துறையினர் பாத்திமாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :