வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. நிதிநிலை அறிக்கை
  3. ரயில்வே நிதிநிலை அறிக்கை 2014-15
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 8 ஜூலை 2014 (17:34 IST)

ரயில்வே பட்ஜெட்டுக்கு பிறகு பங்குச்சந்தையில் கடும் சரிவு

பாஜக அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
 
நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைவதற்கான சூழ்நிலை உருவான நாளிலிருந்து பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தில் இருந்தன. மோடி பிரதமர் ஆன பின்னர் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் உச்சத்தில் இருந்து வந்தது.
 
இந்நிலையில், மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவை நோக்கிச் சென்றது. மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 517 புள்ளிகள் சரிந்து 25582 ஆக இருந்தது.
 
இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. வர்த்தக முடிவில் நிப்டி 155 புள்ளிகள் சரிந்து 7623 ஆக இருந்தது. முன்னணி பொதுத்துறை வங்கிகள், உள்கட்டமைப்பு நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.