வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை பார்த்தால் ஆயுள் குறையும்: அதிர்ச்சி தகவல்


Abimukatheesh| Last Updated: சனி, 4 பிப்ரவரி 2017 (19:19 IST)
வாரத்திற்கு மனிதன் பொதுவாக 40 மணி நேரத்துக்கு மேலாக தான் பணி புரிந்து வருகிறான். இது மனிதனின் ஆயுலை குறைக்கும் என்று ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
பொதுவாக எல்லோரும் 40 மணி நேரத்தை தாண்டித்தான் வேலை செய்கின்றனர். வாரத்திற்கு 39 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் மனரீதியான பாதிப்புகள் மற்றும் உடல்ரீதியான பாதிப்புகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டி என்ற அமைப்பு நடத்தியத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
ஒரு மனிதன் வாரத்திற்கு 39 மணி நேரம் வேலை செய்வது தான் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும். நீண்ட நேரம் வேலை செய்வது உடல் மற்றும் மனதை சோர்வடைய செய்கிறது. இதை தாண்டி வேலை செய்யும் போது ஆயுளின் எண்ணிக்கை குறைவதாக தெரிய வந்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :