ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பல்சுவை
இலக்கியம்
கவிதைகள்
Written By
Sasikala
Last Updated :
சனி, 13 மே 2017 (15:36 IST)
கவிதை - அம்மா
அம்மா
பொத்தி பொத்தி
வளர்த்தவளே !
உன்
புடவை பிடித்து
சுத்தி சுத்தி
வந்த நாட்கள்
இன்று
எட்டி எட்டிப்
பார்கின்றது - என்
எழுதுகோல் வழியாக....
நினைவுகள்
சரிய சரிய
கண்ணீர் துளி
கசிய கசிய
பழைய நினைவுகள்
பம்பரமாய் சுழல சுழல
மனதிற்குள்
நிறப்பிரிகை நிகழ்கின்றது....
அம்மா
உன்
கைப்பட்டதால் தானே
கடுகுக்கும்
கருவேப்பிலைக்கும்
சுவை கூடியது.
உன்
வெகுளி தனத்திடம்
தோற்றுத்தானே
வெள்ளை நிலவு
தலை குனிந்தது.
அறிவுக்கெட்டவளே
என்று அடிக்கடி
திட்டும் அப்பாதானே
உன்னிடமே
ஆலோசனை கேட்டது.
அம்மாவை
படைத்துவிட்டுதானே
பிரம்மனால்
சொர்கத்தை
படைக்க முடிந்தது.
நீ
கற்றுத்தந்த
தமிழ்தானே
இந்த வெள்ளைத்தாளுக்கு
வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறது....
அன்பை
அணு அணுவாய்
அனுபவிக்க
அம்மா மடி மட்டுமே
உத்திரவாதம்!
அம்மாவிற்கு நிகர்
அன்னை !
அன்னைக்கு நிகர்
தாய் !
தாய்க்கு நிகர்
அம்மா !
உலக
ஒட்டுமொத்த
ஆராய்ச்சி மையம்
இன்றுவரை
தோற்றுக்கொண்டே
இருக்கிறது
உன் அன்பிற்கு
ஈடாய்
என்ன இருக்குமென்று ....
அம்மா
இன்று
நானும் ஒரு தாய்.
இப்போதும்
நான் தேடும்
ஒரே சொர்கம்
நீ மட்டும் தான்....
மீண்டும்
உன்
கருவறைக்குள்
எனக்கோர்
இடம் கிடைக்குமா?....
- த.நா. பரிமளச்செல்வி
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஆரோக்கியமான உயிரணுக்கள் உருவாக உதவும் மாசி கருவாடு.. ஆச்சரிய தகவல்..!
மருத்துவ உலகம் கருவாடை குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்தும் ஒரு சிறந்த உணவாகக் குறிப்பிடுகிறது. பல்வேறு வகையான கருவாடுகளில், தனித்துவமானது மாசி கருவாடு. கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்ற சூரை மீன்கள், மாசி கருவாடாக மாற்றப்படும்.
எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!
இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட இரண்டாவது ஆண்டுவிழாவை குறிக்கும் வகையிலும், உலக புற்றுநோய் தினம் 2025 நிகழ்வை ஒட்டியும் ‘வேடிக்கை மூலம் அச்சத்தை வெல்வோம்’ (Beat Fear with Fun) என்ற பெயரில் புற்றுநோய் மீதான விழிப்புணர்வை பரப்பும் முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
இரும்புச்சத்து குறைபாடு என்பது உலகளாவிய அளவில் அதிகமான உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாகும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த குறைபாட்டினால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இரும்புச்சத்து என்பது உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தனிமம். இது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமானது. இரும்புச்சத்து குறைவினால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். அதனால், இந்தக் குறைபாட்டை அறிந்து கொள்வதும், அதனை தடுப்பதும் அவசியம்.
உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
உடலில் சர்க்கரை அளவை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளாவிட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும் அவற்றில் சில இதோ:
8 வடிவ எண்களில் வாக்கிங் செல்வது நன்மையா?
கடந்த சில வருடங்களாக 8 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு வாக்கிங் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த வடிவத்தில் வாக்கிங் செல்பவர்களுக்கு இடுப்பு, வயிறு, கால்களில் இருக்கும் தசைகள் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த உடல் வலிமை தரும் என்று கூறப்பட்டு வருகிறது.
வீடியோ
மேலும் வீடியோக்கள்