வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கவிதைகள்
Written By
Last Updated : சனி, 8 செப்டம்பர் 2018 (16:44 IST)

நம்பிக்கையே மூலதனம்!.. நீ மறந்து விடாதே தோழா..

என்றோ உன்  உலகம் விடியும் 
என்று நீ வெற்றுக் கனவு காணாதே.
உன் இன்ப வானத்தின் இருள் 
அகலக் கனவு காண்!
 
வாழ்வின் தாரக மந்திரம்
உன் உழைப்பு மட்டுமே.
 
தோற்பது ஜெயிப்பது என்பது
 எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு .
வாழ்வின் இலட்சியம் நீ 
உன் வாழ்வில் சாதிப்பதொன்றேயாகும்.
 
 
அதற்காக உன்னை நீயே
அந்தச் சிற்றின்பத்திடம் 
அடகுவைக்காதே.
 
போராடு உந்தன்
முயற்சி கொண்டு.
துணிவே இங்கு பிராதானம்.
மற்றதெல்லாம் சிறுமையாகும்.
 
வேண்டுமென வேண்டி நிற்பது  யாவும்
நிலையில்லாமல் ஒர்நாளில் மறைந்து போகலாம்.
விரும்பாத ஒன்று வந்து 
நிகழ்ந்து என்றேனும் நம்
நெஞ்சைக் பிளந்துவிட்டுப் பாரமாக்கலாம்.
 
தங்கநூலில் நெய்த சீலைஒன்று
வேலிதனில் மாட்டிக்
கந்தலைப் போலக் கிழிந்து போகலாம்
அற்பமான சேற்றில் முளைத்த ரத்தச்செந்தாமரையும் கூட
இறைவனுக்கு உகந்த காணிக்கையாக மறலாம்.
 
அந்த வானம் பூமியின் மீது இறங்கலாம்
பூமியில் பொங்கும் கடலும்
தன் நீராவிக் கைகலால்
விண்ணில் ஏறலாம்.
அதெல்லாவற்றிற்குமே
உன் நம்பிக்கைதான் மூலதனம் என்பதை 
மட்டும் நீ மறந்து விடாதே தோழா.

- சினோஜ்