வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. மற்றவை
Written By Sasikala

கௌதம புத்தரின் எண்வகை வழிகளும் - துன்பத்திற்கு காரணம் ஆசையே என்ற கோட்பாடும்

கௌதம புத்தரின் எண்வகை வழிகளும் - துன்பத்திற்கு காரணம் ஆசையே என்ற கோட்பாடும்

கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக  மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர்.


 


‘ஆசைக்குக் காரணம் துன்பம்’  என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’,  ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’,‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர்.
 
சித்தார்த்த கௌதமா அவர்கள், கபிலவஸ்து பேரரசரான சுத்தோதனா கௌதமா என்ற அரசருக்கும், மகாமாயா  என்ற அரசிக்கும் மகனாக நேபாளில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்தார்.
 
தனது இளம் வயதில், செல்வ செழிப்பான ஆடம்பரமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார், சித்தார்த்தர். தனது  இளமைப் பருவம் முழுவதும் அரண்மனையிலே செலவிட்டார்.
 
தந்தையான அரசர் சுத்தோதனர், சித்தார்த்தர் அவர்களுக்குப் பதினாறு வயதிருக்கும் போது, யசோதரா என்ற  பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும் ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின் மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர்.
 
அரண்மனையை விட்டு வெளியே சென்றார். ஜோதிடர்கள் கணித்தது போலவே, வழியில் அவர், ஒரு முடமான  முதியவர், ஒரு நோயுற்ற மனிதன், ஒரு பிணம் மற்றும் இறுதியாக ஒரு அமைதியான துறவியைப் பார்த்தார்.  முதலில் கண்ட மூன்று பேரும், அவரைக் கலக்குமுறச் செய்தனர், மேலும் அவர்கள், ‘அழகு மற்றும் வாழ்க்கை  நிரந்தரமானது அல்ல’ என்றும் புரிய வைத்தனர். ஆனால், அவர் இறுதியில் கண்ட துறவியின் முகத்திலோ  அமைதி தெரிந்தது. 
 
இதனால், பிறப்பு, முதுமை, நோய், மற்றும் இறப்பு போன்ற பிரச்சனைகளுக்கான விடையைக் கண்டறிய அவர்,  தனது மனைவி, குழந்தைகள், அரண்மனை, ராஜ வாழ்வு போன்ற அனைத்து உலக உடைமைகளை விட்டு,  துறவற வாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். எனவே, அவர் ஒரு இருண்ட இரவில் தனது  வீட்டை விட்டு வெளியேறினார்.
 
தனது கேள்விகளுக்கு பதில் தேடி பல்வேறு மடங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்ற கௌதமர், ‘உண்மையைக்  கண்டறிய ஒரே வழி, தியானம் என்றுணர்ந்தார். பின்னர், பனாரஸ் அருகே உள்ள போத்கயா காட்டிற்குச் சென்று, போதி மரத்திற்கு அருகிலுள்ள ‘அஜபலா’ என்னும் ஆலமர நிழலில் தியானத்தில் அமர்ந்தார். முழு  ஒளியூட்டத்தை அடைவதற்காக, தனது உயிரையே இழக்கத் தயாராக இருந்து, ஞானம் ஒன்றையே தனது  குறிக்கோளாகக் கொண்டிருந்த கௌதமருக்கு, உலக மாயைகள் பல்வேறு விதமான இடையூறுகளும், தொந்தரவுகளும் கொடுத்தன. இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல், 49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில்  இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது.
 
கௌதம புத்தரின் போதனைகள் அனைத்தும் மனிதர்களை வாழ்வின் துன்பம் மற்றும் தவிப்பிலிருந்து  விடுவிக்ககும் ஒரே நோக்கத்தைத் தழுவியது. ஆகவே, அவர் புத்தமதத்தை நிறுவினார். புத்தமதம், ‘ஆசையும்,  துன்பமுமே இந்த உலகத்தில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் முக்கிய காரணம்’ என்ற கருத்தை மனிதனுக்கு  உரைக்கிறது. மேலும் அவர் எண்வகை வழிகளான ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’,  ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்றவற்றை  அனைவருக்கும் போதித்தார்.
 
புத்தர் அவர்கள், தனது சீடர் ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு உணவு உண்ணச் சென்றார். அந்த  உணவில் அவரது சீடர் கலந்த விஷத்தால், அவர் நோய்வாய்ப்பட்டார். பின்னர், தள்ளாடி அவர், குஷிநாகா என்ற இடத்திற்குச் சென்றார். அவர், தனது இறுதி குளியலை காகுத்தா ஆற்றில் குளித்தார். இதையடுத்து சில நேர  ஓய்விற்குப் பிறகு, அவர் இயற்கை எய்தினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்