1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (16:25 IST)

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் செல்வம், செல்வாக்குக் கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.

நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புது பதவிகள் தேடி வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக இருப்பார்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். உங்கள் ரசனைப்படி வீடு, மனை அமையும்.
 
கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. புனிதப் பயணங்கள் சென்று வருவீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். ஆனால் நண்பர்கள், உறவினர்கள் சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புது வேலை அமையும். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். வேலையாட்கள் பிரச்சனை ஓயும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். நினைத்ததை முடிக்கும் மாதமிது.   
 
  
அதிஷ்ட தேதிகள்: 4, 5, 6, 14, 24  
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பழுப்பு
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்