1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2015 (19:52 IST)

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-6,15,24

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-6,15,24
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோம்பல் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். 
 
திடீர் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரும். சகோதரரிக்கு திருமணம் முடியும். வீண் செலவுகள் குறையும். வேலைக் கிடைக்கும். 
 
உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஹிந்தி பேசுபவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகளே! தலைமையை பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்காமல், தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். போட்டிகள் குறையும். புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினர்களே! வீண் வதந்திகள் விலகும். எதிர்ப்புகளை எளிதாக சமாளிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்:6,13,14,15,17  
அதிஷ்ட எண்கள்:1,6
அதிஷ்ட நிறங்கள்:பிங்க்,ஆரஞ்சு 
அதிஷ்ட கிழமைகள்:திங்கள்,புதன்