வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2015 (19:49 IST)

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-5,14,23

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். 
 
அரசியலில் செல்வாக்குக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலைகளை தொடர்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். 
 
தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந்தம் தேடி வரும். சொத்து சேரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அவ்வப்போது வீண் டென்ஷன், முதுகு, மூட்டு வலி வந்து விலகும். ஆன்மீகவாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு.

அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்:5,6,8,15,23   
அதிஷ்ட எண்கள்:4,7
அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,மயில் நீலம்
அதிஷ்ட கிழமைகள்:ஞாயிறு, வியாழன்