செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (20:43 IST)

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள்,  பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். 


 

 
வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற சொத்து வாங்குவீர்கள். மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பழைய நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பழைய வீட்டை புதுமைப்படுத்துவீர்கள். 
 
அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வழக்கு சாதகமாக திரும்பும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். பழைய கசப்பான சம்பங்கள் நினைவுக்கு வரும். கண் மற்றும் பல் வலி வந்து நீங்கும். 
 
மனஇறுக்கம்,  தூக்கமின்மை,  தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். கோவில் விழாவை முன்னின்று நடத்துவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். 
 
அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். 
 
கன்னிப் பெண்களே! தடைபட்ட கல்வியை தொடருவீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். நெளிவு,  சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் சம்பளம் உயரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.
       
அதிஷ்ட தேதிகள்: 4, 6, 15, 24, 26  
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஆலிவ்பச்சை
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்