திங்கள், 13 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2016 (17:06 IST)

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் போராட்டங்களும், தடைகளும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள்.

பிரபலங்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
 
பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக முடியும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தூக்கம் குறையும்.
 
அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வந்துப் போகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எதிர்காலம் பற்றிய கவலை அடி மனதில் நிழலாடும். யாரும் உங்களைப் புரிந்துக் கொள்ளவில்லை என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோரை அனுசரித்துப் போங்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்திப்பீர்கள்-. வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி யோசிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். ராஜ தந்திரயுக்திகளால் வெற்றி பெறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 7, 2, 6, 11, 25
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி