திங்கள், 13 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2016 (17:05 IST)

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். சகோதரிக்கு திருமணம் முடியும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவி குடும்ப வருமானத்தை உயர்த்த சில ஆலோசனைகள் வழங்குவார். மனைவிவழி உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.
 
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் சென்று வருவீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டா-கும். அவ்வப்போது முன்கோபம், காரியத் தாமதம், அலைச்சல் வந்துப் போகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை விரைந்து செலுத்தப்பாருங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பது நல்லது. அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும்.
 
கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். கொஞ்சம் அலைந்தாலும் அதற்கான பலனை அடையும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 4, 6, 8, 17, 26
அதிஷ்ட எண்கள்: 5, 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, வெளிர் நீலம்
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்