திங்கள், 13 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2016 (16:53 IST)

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாததத்தில் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ஷேர் மூலமும் பணம் வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஆன்மிகப் பெரியோர், சித்தர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள்.
 
பூர்வீக சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மாதத்தின் முற்பகுதியில் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம். தாயாருக்கு நெஞ்சு வலி, உங்களுக்கும் கை, கால் வலி, அசதி வந்துப் போகும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினர்களே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும். விட்டுக் கொடுத்துப் போவதால் வெற்றி பெறும் மாதமிது. 
                     
அதிஷ்ட தேதிகள்: 4, 15, 17, 24, 26
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், பிஸ்தா பச்சை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி