திங்கள், 13 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 31 அக்டோபர் 2016 (16:57 IST)

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் உங்கள் ரசனை மாறும். வி.ஐ.பிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். சகோதரங்கள் உங்கள் தேவையறிந்து உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.
 
பழைய பிரச்னைகளுக்கு ஒரு பக்கம் தீர்வுகள் கிடைத்தாலும் புதிது புதிதாக சில பிரச்னைகளும், சிக்கல்களும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும். என்றாலும் பிள்ளைகள் கோபப்படுவார்கள். நெருங்கிய உறவினர்களில் சிலர் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று இருப்பார்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையை பற்றி சகாக்களிடம் குறை கூற வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! வெலுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாறாதீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உயரதிகாரியால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் தேடி வரும். பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்ட வேண்டிய மாதமிது-.      
 
அதிஷ்ட தேதிகள்: 2, 11, 15, 16, 20
அதிஷ்ட எண்கள்: 2, 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை 
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்