திங்கள், 13 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2016 (16:42 IST)

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் எதிர்பார்த்திருந்த தொகைக் கைக்கு வரும்.

கல்வியாளர்கள், அறிஞர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும்.
 
அரசியலில் செல்வாக்குக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புதிதாக டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பேசி தீர்க்கப்பாருங்கள். அவ்வப்போது மனஇறுக்கம், அசதி, சோர்வு வந்துப் போகும். அரசியல்வாதிகளே! புது பொறுப்புகள் தேடி வரும்.
 
கன்னிப் பெண்களே! முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரி அலுவலக ரகசியங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். இங்கிதமாகப் பேசி சக ஊழியர்களின் குறை, நிறைகளை சரி செய்வீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். விவேகமான முடிவுகளால் முன்னேறும் மாதமிது.                        
 
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 10, 12, 21
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, ஊதா
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்