1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 1 மே 2017 (16:00 IST)

மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் தன்னம்பிக்கை பெருகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். புதுத் திட்டங்கள் நிறைவேறும்.



 


குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். அதிகாரப் பதவிகள் தேடி வரும். தந்தையின் உடல் நலம் சீராகும். தடைப்பட்ட அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

கல்வியாளர்கள்,  வி. ஐ. பிகளுக்கு நெருக்கமாவீர்கள். நட்பு வட்டம் விரியும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோவில் பஜனைகளில் கலந்துக் கொள்வீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து மனஇறுக்கம்,  மனைவியுடன் வாக்குவாதம் வந்து செல்லும். பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். வாகனத்தை இயக்கும்போதும்,  சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. இரத்த அழுத்தம் அதிகரிக்கும். சகோதர வகையில் பிரச்னைகள் வரக்கூடும். சொத்து வாங்குவது,  விற்பதில் சிக்கல்கள் வந்து விலகும்.

கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 7, 16, 25, 11, 20
அதிஷ்ட எண்கள்: 1, 6
அதிஷ்ட நிறங்கள்: பழுப்பு, இளம்சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி