மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23


Abimukatheesh| Last Modified திங்கள், 1 மே 2017 (14:58 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் சவாலான காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். புதிதாக வீடு,  மனை வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.

 


மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஷேர் மூலம் லாபம் வரும். உறவினர்கள்,  நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். தந்தை வழியில் இருந்த பனிப்போர் நீங்கும்.

ஆடை,  ஆபரணம் சேரும். சகோதரிக்கு திருமணம் முடியும். வழக்கு சாதகமாகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள்.

கன்னிப் பெண்களே! கனவு நனவாகும். வீண் சந்தேகம், தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.

கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் ஆதரவுக் கிட்டும். சாதித்துக் காட்டும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 5, 8, 15, 14, 24
அதிஷ்ட எண்கள்: 1, 9
அதிஷ்ட நிறங்கள்: கிரே, பிஸ்தாபச்சை 
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி
 


webdunia

இதில் மேலும் படிக்கவும் :