மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வீடு, வாகன வசதிப் பெருகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம் கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பினால் மகிழ்ச்சி அடைவீர்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள்.
தள்ளிப் போன காரியங்கள் முடியும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். மாதத்தின் பிற்பகுதியில் வீண் செலவு, பயம், சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது.
கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் விரையம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன்பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள்.
கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். யதார்த்தமான பேச்சால் சாதிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 3, 1, 9, 10, 21
அதிஷ்ட எண்கள்: 1, 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ரோஸ்
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி