மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கல்வியாளர்கள், பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும். மகான்கள், ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்கு நீங்கும். கண், பல் வலி சரியாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.
புது வேலைக் கிடைக்கும். வீடு கட்ட அரசு அனுமதி கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். அவ்வப்போது தலை வலி, முன்கோபம், வீண் டென்ஷன், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். வாகனத்தில் கவனம் தேவை.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார். வியாபாரத்தில் போட்டிகள் தளரும். புது தொடர்பு கிடைக்கும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும். முயற்சிகளால் முன்னேறும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 2, 11, 20, 15, 25
அதிஷ்ட எண்கள்: 3, 8
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, பச்சை
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி