மே மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28


Abimukatheesh| Last Modified திங்கள், 1 மே 2017 (14:11 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களை எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள்.  

 


குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்.  வீடு,  வாகனம் வாங்குவீர்கள்.  திருமணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். பிள்ளைகளை உற்சாகப்படுத்த கேட்டதை வாங்கித் தருவீர்கள்.  பூர்வீக சொத்தை மாற்றுவீர்கள்.  தாயாரின் ஆரோக்யம் சீராகும்.  அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டு.  உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.  கடன் பிரச்னையை தீர்க்க புது வழி கிடைக்கும்.  எதிர்பார்த்த பணம் வரும். விலை உயர்ந்த ஆடை,  அணிகலன்கள் சேரும்.  என்றாலும் சொத்து வாங்குவது,  விற்பதில் சிக்கல்கள் வரும்.  யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.  வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.  பார்வை கோளாறு,  பல் வலி வந்து நீங்கும்.  

 
கன்னிப் பெண்களே! அலட்சியப் போக்கு மாறும்.  எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.  
 
அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.  வேலையாட்கள் சில சமயங்களில் முரண்டு பிடிப்பார்கள்.  உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.  மேலதிகாரி உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்.  
 
கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.  தைரியமான முடிவுகளை எடுக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 12, 21, 18
அதிஷ்ட எண்கள்: 2, 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்


webdunia

இதில் மேலும் படிக்கவும் :