Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24


Abimukatheesh| Last Modified புதன், 1 மார்ச் 2017 (18:37 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தொட்ட காரியம் துலங்கும். பணவரவு அதிகரிக்கும்.

 


மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைக்கு இருந்த நோய் குணமாகும் என்றாலும் தந்தைக்கு வேலைச்சுமை, அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள்.

உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். 

 
அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. 

கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். 
 
கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வி.ஐ.பிகளால் பாராட்டப் பெறும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 6, 8, 15, 17, 26
அதிஷ்ட எண்கள்: 7, 8
அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, நீலம்
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி


இதில் மேலும் படிக்கவும் :