1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (18:33 IST)

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பதவிகள் தேடி வரும். புது வேலைக் கிடைக்கும்.


 


பிதுர்வழி சொத்துகள் சேரும். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வரைபட அனுமதி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய புது உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள்.

புதியவர்கள் நண்பர்களாவார்கள். மாதத்தின் பிற்பகுதில் கட்டை விரல், கண் புருவம், கால் மூட்டில் அடிப்படும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்காதீர்கள். சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் இருக்கும். 

அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.

ன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். பெரியளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். 
 
கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். ரகசியங்களை காக்க வேண்டிய மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 5, 1, 17, 14, 26
அதிஷ்ட எண்கள்: 5, 9
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, கிரே
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி