1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (18:22 IST)

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தின் முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள்.


 


உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். திடீர் நண்பர்களை நம்ப வேண்டாம். விலை உயர்ந்த நகை, பணத்தை கவனமாக கையாளுங்கள். முடிந்த வரை முக்கிய விஷயங்களை நீங்களே, நேரில் சென்று முடிக்கப் பாருங்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள்.

மாதத்தின் மையப் பகுதியிலிருந்து அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். பழைய இனிமையான நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். என்றாலும் அவசர முடிவுகளை தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்துப் போகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பழைய சொந்த-பந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. 
 
அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்கள், பங்குதாரர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். 
 
கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டிய மாதமிது. 
     
அதிஷ்ட தேதிகள்: 2, 7, 6, 11, 25
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, ஊதா
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி