செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 28 பிப்ரவரி 2016 (19:14 IST)

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உடல் ஆரோக்யம் சீராகும்.
 
கணவன் -மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும்.
 
பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். என்றாலும் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். சொந்த -பந்தங்களிடையே கலகலப்பாகப் பேசி மகிழ்வீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் அரசாங்க விஷயம் தாமதமாக முடியும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
 
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். மூலை பலத்தால் முன்னேறும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 8, 5, 6, 23, 26
அதிஷ்ட எண்கள்: 5, 9
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்